நீர்ப்பாசனம் (Irrigation) என்பது வேளாண்மையில், ஒழுங்கான இடைவெளிகளில் பயிர் களுக்குக் கட்டுபடுத்திய அளவு நீரை வழங்கும் முறையாகும். நீர்ப்பாசனம் வேளாண்பயிர் வளர்க்கவும் நிலக்கட்டமைப்பைப் பேணவும் மழை பொய்த்த காலத்தில் உலர்பகுதிகளின் மண்வளம் பேணவும், மீள்பசுமையூட்டவும் பயன்படுகிறது. மேலும் பயிரிடும்போது பயிர்களைப் பனிப்படர்வில் இருந்து காக்கவும் இது பயனாகிறது.[1] மேலும் களைகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவும்[2], மண் கடினமாதலைத் தடுத்தல்[3] போன்ற செயல்களுக்கும் உதவுகிறது. நீர்ப்பாசன அமைப்புகள் தூசை அடக்கவும், கழிவு வெளியேற்றவும், சுரங்கத்தில் [[கனிமம்|கனிமக் கரைந்தூற வைக்கவும் பயன்படுகின்றன.
பாத்திக்கு நீர்பாய்ச்சும் நீர்ப்பாசனத் தெளிப்பி
மாறாக, நேரடி மழையை நம்பி விளையும் பயிர் மானாவாரிப் பயிரிடல் அல்லது மானாவாரி வேளாண்மை அல்லது கொல்லை வேளாண்மை எனப்படுகிறது. நீர்ப்பாசனம் வடிகாலுடன் இணைந்தே ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வடிகால் குறிப்பிட்ட பரப்பில் இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ, அதேவேளை மேற்பரப்புநீரை வடிப்பதாகவோ அல்லது கீழ்நீரை வடிப்பதாகவோ அமையலாம்.
நீர்ப்பாசனம் 5000 ஆண்டுகளாக வேளாண்மையில் அடிப்படை ஏந்தாக நிலவி வருகிறது. இது பல பண்டைய பண்பாடுகளின் விளைவாகும். வரலாற்றியலாக, நம்புவி]]யின் பொருளியலுக்கும், சமூகங்களுக்கும் ஆசியா முதல் வட அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதி வரை வாழ்க்கை வளமாகியது.
துருக்கி ஓசுமேனியாவில் உள்ள நீர்ப்பாசனக் கால்வாய்
வரலாறு
மழை சார்ந்த வேளாண்மையில் போதுமான நீர் கிடைக்காதபோது நீர்ப்பாசனப் பயன்பாடு நிலவியமை தொல்லியல் அகழாய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
தொடர் நீர்ப்பாசனம் மெசபடோமியச் சமவெளியில் பயிர்களின் வளர்பருவத்தில் ஒழுங்காக வயல்களில் கட்டப்பட்ட பாத்திகளூடாக நடைமுறையில் இருந்துள்ளது. பண்டைய எகிப்திய மக்கள் நைல் ஆற்றின் வெள்ளநீரைப் பயன்படுத்தி வடிநில நீர்ப்பாசன முறையால் வயல்களுக்கு நீரைப் பாய்ச்சியுள்ளனர். இந்த வயல்களைச் சுற்றிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. வெள்ளநீர் வயல்களில் செழிப்பான வண்டல் படியும் வரை நிறுத்திப், பின்னர் ஆற்றுக்கு வடிய விடப்பட்டுள்ளது.[5] பண்டைய எகிப்திய பன்னிரண்டாம் பேரரசின் பரோவா ஆகிய மூன்றாம் அமனமெது (கி.மு 1800 ) பையூம் பாலைவனச்சோலையில் இருந்த இயற்கை ஏரியைப் பயன்படுத்தி மிகநீர்வரத்தைத் தேக்கி வறண்ட காலங்களில் வேளாண்மைக்குப் பயன்படுத்தியுள்ளமைக்கன சான்றுகள் உள்ளன. வெள்ளக் காலங்களில் இந்தத் தேக்கம் நைல்நதியின் நீர்ப்பெருக்கால் கரைபுரண்டுள்ளது.[6] பண்டைய நியோபியர்கள் சாகியா நீராழியைப் பயன்படுத்தி கி.மு மூன்றாம், இரண்டாம் ஆயிரங்களில் நீர்ப்பாசனத்தை மேற்கொண்டுள்ளனர். இப்போது சூடானில் உள்ள ஆறுகளோடு நைல்நதியின் வெள்ளப் பெருக்கைப் பெரும்பாலும் இந்தவகை நீர்ப்பாசனம் பயன்கொண்டுள்ளது.
விலங்கு பூட்டிய நீர்ப்பாசனம், எகிப்து, கி.பி. 1846
ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா உட்பகுதியில் நைகர் ஆற்றங்கரைப் பண்பாடுகளில் கி.மு இரண்டாம், முதலாம் ஆயிரங்களில் பருவமுறை வெள்ளத்தைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் நடைபெற்றுள்ளது.
மேட்டு அடுக்குநிலைப் பாசனம் முன்பு கொலம்பியா, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் சீனாவிலும் நடப்பில் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பெருவில் அமைந்த ஆந்தெசு மலைத் தொடர்களில் உள்ள சானா பள்ளத்தாக்கில், தொல்லியலாளர்கள் மூன்று நீர்ப்பாசனக் கால்வாய்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பின்படி, கி.மு நான்காம், கி.மு மூன்றாம், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டகளைச் சார்ந்தவையாகும். புத்துலகப் பகுதியில் கிடைத்த மிகப்பழைய பாசனக் கால்வாய்களாகும். மேலும் கி.மு நான்காம் நூற்றாண்டுக் கால்வாய்க்கடியில் கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக் கால்வாய்க்கான சுவடுகளும் கிடைத்துள்ளன. இப்போதைய பாக்கித்தானிலும் வட இந்தியாவிலும் அமைந்திருந்த சிந்துவெளி நாகரிகம் நுட்பம் வாய்ந்த நீர்த்தேக்க அமைப்புகளையும் பாசன முறைகளையும் வளர்த்தெடுத்துள்ளது. இதில் கி.மு 3000 அளவில் கிர்னாரில் அமைதிருந்த அணைகளும், கி.மு 2600 இல் உருவாக்கபட்ட பாசனக் கால்வாய் அமைப்புகளும் உள்ளடங்கும். இங்கு பேரளவு வேளான்மைக்கான பாசனக் கால்வாய் வலையமைப்புகள் வழியாக நீர்ப்பாசனம் நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம்
பண்டைய பாரசீகத்தில் (இன்றைய ஈரானில்) கி.மு 6000 ஆண்டுகளிலேயே பார்லி அரிசி இயற்கையான மழையளவு குறைவாக இருந்தபோதும் பயிரிடப்பட்டுள்ளது.[14] பண்டைய பாரசீகத்தில் கி.மு 800 இல் உருவாக்கப்பட்ட குவானாத் பாசனமுறைகள் மிகப்பழைய பாசனமுறைகளாக அமைதலோடு இன்றளவும் அவை நடைமுறையில் நிலவி வருகின்றன. இம்முறைகள் இன்றும் ஆசியாவிலும் நடுவண் கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் பயன்பாட்டில் உள்ளன. இந்த அமைப்பில் செங்குத்தான மலைகளில் செங்குத்தான சுவர்களும் அவற்றில் இருந்து மலைச் சாரலின் முகப்புவரை சாய்வாக இறங்கும் கால்வாய்கள் அமைந்த சுருங்கைகளும் நிலத்தடி நீரை மடுத்து பயன்படுத்திப் பாசனத்தை மேற்கொண்டன.[15] இதே கால அளவில் வட ஆப்பிரிக்காவில் குடியேறிய உரோமானியர்களால் உருவாக்கப்பட்ட விளிம்பில் களிமட்பானைகள் பூட்டப்பட்ட நோரியா எனும் நீராழி ஆற்று நீரில் நீரோட்டத் திறனாலும் தேங்கிய நீரில் விலங்குகளின் ஆற்றலாலும் இயங்கியுள்ளது. கி.மு 150 அளவில், இந்தப் பானைகள், நீரில் வேகமாக இறங்கும்போது, நீரை மெதுவாக முகக்க, அவற்றில் கவாடங்கள் பூட்டப்பட்டுள்ளன.
பண்டைய இலங்கையில் கிமு 300 அளவில் பாண்டுகப்பாயா ஆட்சியில் வளர்த்தெடுக்கப்பட்ட பாசனப் பணிகள் அமைவு, பண்டைய உலகின் மிகச்சிக்கலான பாசனமுறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இவர்கள் நிலத்தடிக் கால்வாய்களை உருவாக்கிக் கட்டியமைத்ததோடு பெருமளவு நீரைத் தேக்கிடவல்ல அணைகளையும் கட்டியெழுப்பினர். இந்த அவர்களது திறமைக்காக அவர்கள் பாசன வல்லுனர்கள் எனவும் போற்றப்பட்டனர்.<!—இந்த மேற்கோள் சிறிலங்காவின் சிங்கள ஆசிரியரால் எழுதப்பட்டது– இது சிங்களத் தேசியப் பரப்புரை போல அமைகிறதே தவிர வரலாறாகத் தோன்றவில்லை –> பெரும்பாலான இந்தப் பாசன அமைப்புகள் அனுராதபுரத்திலும் பொலனருவையிலும் அவற்றின் முன்னேறிய பொறியியல் வல்லமையாலும் துல்லியமான நடைமுறையாலும் இன்றும் அழிவின்றி நிலவுகின்றன. இந்தப் பாசன அமைப்புபராக்கிரம பாகு எனும் அரசர் காலத்தில் (கி,பி 1153–1186 ) மீட்டு மேலும் விரிவாக்கப்பட்டன.
இன்றைய நீர்ப்பாசனப் பரவலும் அளவும்
சுட்டிராபெரி முகட்டுச் சாலைக்குச் சற்றே தொலைவில் அமைந்தபென்னிசில்வேனியாவின் மாண்டவர் கவுண்ட்யில் இருந்த பாசனக் கால்வாய்
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பெருகிய டீசல்-எக்கி அணிகளும் மின்னோடி-எக்கி அணிகளும் நிலத்தடி நீரை வேகமாகப் பாசனத்துக்காக இறைப்பதால், மிகப்பெரிய நீரகங்களும் அவை மழைவடிகால்களால் நிறையும் வேகத்தை விட வேகமாக வற்றிவருகின்றன. இதனால் நீரகத் தேக்களவு நிலையாக குறைக்கவும் நீரின் தரத்தைக் குறைக்கவும் நிலப்பரப்பு குலையவும் வேறுபிறச் சிக்கல்கள் உருவாகவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிகழ்வால் வடசீனச் சமவெளி, பஞ்சாப் சமவெளி, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் பெருஞ்சமவெளிகளின் உணவு விளைச்சல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
2000 ஆம் ஆண்டளவில், புவிக்கோள முழுவதிலும், 2,788,000 km² (689 மில்லியன் ஏக்கர்கள்) அளவுக்குச் செழிப்பான நிலப் பரப்பு பாசன அமைப்புகளைப் பெற்றுள்ளன. இதில் 68% பரப்பு ஆசியாவிலும், 17% பரப்பு அமெரிக்காவிலும் 9% பரப்பு ஐரோப்பாவிலும் 5% பரப்பு ஆப்பிரிக்காவிலும் 1% பரப்பு ஓசியானாவிலும் அமைந்துள்லது. உலகின் உயர்பாசனச் செறிவுள்ல பகுதிகள் கீழ்வருமாறு:
- கங்கை, சிந்து ஆற்ருச் சமவெளிகளில் அமைந்த பாக்கித்தான் வட இந்தியப் பகுதிகள்
- சினாவின் கை கே, குவாங் கே, யாங்ட்சே வடிநிலங்கள் (படுகைகள்)
- எகிபது, சூடானில் உள்ள நைல் ஆற்றங்கரைச் சமவெளி
மிசிசிப்பி-மிசிசோரி ஆற்ருச் சமவெளி, கலிபோர்னியாவின் சில பகுதிகள்
கோதுமைக்கான வடிநில வெள்ள நீர்ப்பாசனம்
சிறுசிறு பாசனப் பகுதிகள் மக்கள் வாழும் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளன.[20] எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. 2008 இல் பாசன நிலப் பரப்பளவு 3,245,566 km² அளவுக்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (802 million acres)இது இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமாகும்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. 2008 இல் பாசன நிலப் பரப்பளவு 3,245,566 km² அளவுக்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (802 million acres)இது இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமாகும்.
நீர்ப்பாசன வகைகள்
நீர் உரிய வாயில்களில் இருந்து வயலுக்கு எவ்வாறு பரவச்செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து பல்வேறு நீர்ப்பாசனம் நுட்பங்கள் வேறுபடுகின்றன. பொதுவாக, பாசனத்தின் இலக்கு வயலுக்கு சீராக நீரைப் பாய்ச்சுவதாகும். நீரளவு போதுமானதாக கூடவோ குறையவோ அமையாமல் இருத்தல் வேண்டும்.