அடுக்கு நீர்ப்பாசனம்
- அதிக அழுத்த பாசன முறைகளான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் இருந்தாலும் பாரம்பரிய முறையான மண்ணின் மேற்பரப்பில் பாசனம் செய்யும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது.
- இதனுடைய எளிமையான அமைப்பு முறை, அமைப்பதற்கான குறைந்த செலவு, மற்றும் செயல்படுத்தும் செலவு குறைவு என்பதாலும் இந்த முறை விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றது.
- சிறிய வரிசை பள்ளம் மற்றும் தடுப்புப்பாத்தி அமைப்பு முறைகள் (தமிழ்நாட்டில் முக்கியமான பாசனமுறையாகும்) அல்லது செவ்வக வடிவ வயல்களில் குறுக்கு நெடுக்கு வரப்பு அமைத்து, வாய்க்கால் வழியே நீர்ப்பாய்ச்சப்படுகிறது.
- இந்த முறையில் நீர்ப் பாய்ச்சுவதற்கு நெடு நேரம் எடுத்துக் கொள்கிறது மற்றும் பாசன பயன்பாடு 55 – 65% அதிக கசிவு, ஆழமான துளை வழி கசிவு மற்றும் ஓடுநீர் இழப்பு (35 – 45%) குறைகிறது.
- இது மட்டுமல்லாமல் மேடு பள்ளம் உடைய குறுக்கு நெடுக்கு அமைப்பு முறையில் 15 – 25% நீர் இழப்பு ஏற்படுகிறது.
- இதைக் குறைப்பதற்கும் அதிக நீர்ப்பாசனம் செய்வதைத் தடுப்பதற்கும் புதிய முறையாக அலைநீர் பாசனம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அதிக பரிசோதனைகள் செய்து 1992 – 95 ல் அதிக நீர் விசையியல் ஆய்வு மற்றும் பயிருக்கு ஓத்துப் போகிறதா என்றும் ஆய்வு செய்து இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பண்புகள்
- அடுக்கு நீர்ப்பாசனம் என்பது பார் பிடித்த வயல்களில் பாத்திகளின் வழியே நீர்ப்பாய்ச்சல் செய்வது ஆகும்.
- இம்முறை நன்கு வரையறுக்கப்பட்ட ( 25மீ லிருந்து 200 மீ வரை) மடை அடைப்பு மற்றும் திறப்பு கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
- இம்முறையில் பாசனக் கால்வாயிலிருந்து நீரானது பிரதான பாத்தியினுள் பாய்கிறது.
- பிரதான பாத்தியிலிருந்து நீளமான பாத்தியினுள் செல்லும். இவ்வாறு செல்லும் நீரானது பாரின் மீது வளரும் பயிரின் வேர்களுக்கு எளிதில் உறிஞ்சக் கிடைக்கிறது.
- பாத்தியின் கடைக்கோடியில் 30-50 சதம் தண்ணீரே சென்று சேருகிறது. எனினும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது.
- இம்முறையில் 80-85 சதவீத நீர்ப்பயிர்களுக்குக் கிடைக்கிறது. நீரின் வேகம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பார்களைக் குறுக்கு நெடுக்குமாக அமைத்தால் நீரின் வேகத்தை மட்டுப் படுத்தலாம்.
- இதனால் 5 சதவீத நீரின் இழப்பு குறைக்கப்படுகிறது. இம்முறை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழற்சி முறையில் பின்பற்றப்படுகிறது.
அடுக்கு நீர் அலைப்பாசனம் பற்றி வேளாண் பல்கலைக்கழகத்தின் மதிப்பீடு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பகுதி தானியங்கி மற்றும் தானியங்கி அடுக்கு நீர்ப் பாசனக் கருவிகளை அமைத்துள்ளது. இம்முறையில் ஒரு பாத்திக்கு நிமிடத்திற்கு 30 லிருந்து 120 லிட்டரும், மடை அடைப்பு மற்றும் திறப்பு 5 லிருந்து 30 நிமிடத்திற்கு ஒரு முறை, சுழற்சி வீதம் (0.25-0.66), பாத்தித் துகள்கள் (0.1-0.6) பாத்தி (30-120 செ.மீ.) , பாத்தியின் நீளம் (50-200 மீ) என்ற அளவிற்கு வசதிக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
மண் எற்புத்தன்மை
மணற்பாங்கான வண்டல் மண் மற்றும் வண்டல் மண்
பரிசோதித்த பயிர்கள்
- மக்காச் சோளம், சூரியகாந்தி மற்றும் சோளம்
- நீர் சேமிப்பு : 25-40%
- நில சேமிப்பு : 15-25%
குறைபாடுகள்
அடுக்கு நீர் பாய்ச்சல் முறைகள் நல்ல களிமண் அல்லது மணற்பாங்கான நிலங்களில் அதிக வேறுபாடுகள் தோன்றும். அதோடு இம்முறை இந்தரியால் இன்னும் ஆரம்ப அளவிலேயே இருக்கிறது.
விரிவாக்கப் பணிகள் மூலம் பிரபலப்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
தெளிப்பு நீர்ப் பாசனம்
1. | செயல்கள் | நிலப்பரப்பிற்கு மேலே நீரை மழைபெய்வது போல் பம்ப் உதவியுடன் தெளிக்க செய்கிறது |
2. | தனிக்குறிப்பீடு | குறைவான அழுத்தம் (1.0 கிலோ / செ.மீ2 ) ஒரு தெளிப்பானை செயல்படுத்த தேவைப்படுகிறது. ஒரு தெளிப்பான் மூலம் 12 மீ சுற்று வட்டாரம் வரை தெளிக்கலாம்4 – 5 கிலோ / செ.மீ2 அழுத்தம், 4 தெளிப்பானை ஒரே நேரத்தில் பயன்படுத்த தேவைப்படுகிறதுகாற்றின் வேகம் 15 கிலோ மீட்டர் / மணி குறைவாக இருக்கும்போது செயல்படுத்துவது எளிதாகிறது. இதனால் நீர் இழப்பைத் தடுக்கலாம்அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தெளிப்பானைப் பயன்படுத்துவதால் ஆவியாகுதல் இழப்பைத் தடுக்கலாம் |
3. | விலை | தோராயமாக ரூ. 3000 – 4000 / ஹெக்டேர் |
4. | சிறப்பியல்புகள் | மலைப்பகுதிகளில் மேடு பள்ளம் இல்லாத பகுதிகளுக்கு ஏற்றதுமலைத் தோட்டப் பயிர்களான தேயிலை, காபி மற்றும் இதரப் பயிர்களுக்கு ஏற்றதுநிலக்கடலை, பருத்தி, முன்பே பூ உதிராத பயிர்களுக்கு ஏற்றதுபாரம்பரிய பாசனத்தை விட 30 – 40 % செலவு குறைகிறது |
தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர்களுக்கான நீர் தேவை
பயிர் | நீர் உபயோகம் (மி.மீ) | நீர் சேமிப்பு | நீர் பயன்பாடு கி.எக்.மி.மீ |
சோயா | 380 | 50.5 | 4.77 |
உளுந்து | 140 | 50.0 | 8.82 |
பொதுவான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள்
அ, தெளிப்பு நீர்ப்பசானம் அமைக்க ஆரம்ப செலவுகள் அதிகம், எனினும் இந்த அமைப்பு குறைந்தது 10 ஆண்டுகள் வரை நன்கு பயன்படக் கூடியவை
ஆ, நம் நாட்டில் பெரும்பான்மையான விவசாயிகள் சிறு மற்றும் குறுநிலங்களையே கொண்டுள்ளனர். இதற்கு பல விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து அமைத்தால் செலவை குறைக்கலாம்
இ, தெளிப்பான் ஒன்று 12 மீ வரை நீர் தெளிக்கக் கூடியது. இதற்கு 1 கி.கி /ஒரு சதுர செ.மீ. அழுத்தம் தேவைப்படுகிறது.
ஈ, காற்று அதிகமாக வீசும்போது தெளிப்பானின் திசை மற்றும் வேகம் மாற வாய்ப்புள்ளது. காற்று வீசும் சமயங்களில் அடிக்கடி மேற்பார்வையிடும்போது இதனைச் சரி செய்து கொள்ளலாம்.
உ, விவசாயிகளுக்கு தெளிப்பான் மற்றும் அதன் உபயோக முறைகளைப் பற்றி சரியான பயிற்சி அளிக்க வேண்டும்
அலைநீர்ப் பாசனம்
வெள்ள நீர்ப்பாய்ச்சல்
- வெள்ளப் பாசன முறை முன்னோர்களால் பின்பற்றப்பட்ட பழைய முறையாகும்.
- இது தான் பயிர்களை சாகுபடி செய்ய முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பாசன முறை.
- வயலுக்கு நீர் பள்ளம், குழாய் அல்லது வேறு வழியில் பாய்ச்சப்படுகிறது.
- வெள்ளப் பாசன முறை பயனுள்ள பாசன முறையாக இருந்தாலும் இந்த முறை மற்ற முறைகளை விட பயன்பாடு குறைவாக உள்ளது. இந்த முறையில் அளிக்கப்படும் நீரில் பகுதி நீர் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கிறது.
- மீதமுள்ள நீர் ஆவியாதல் வழிந்தோடும் நீர், நீர் உள்ளீர்ப்பு மற்றும் நீராவியாதல் மூலம் இழப்பு ஏற்படுகிறது.
- மற்ற முறைகளைப் போன்று வெள்ளநீர்ப்பாய்ச்சல் முறை அதிக அளவு பயன்பாட்டில் இல்லையெனினும், கீழ்க்கண்ட உத்திகளைக் கையாண்டு அதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.
நிலத்தைச் சமப்படுத்துதல்
இம்முறையில் புவி ஈர்ப்பு விசை மூலமாகவே நீர் செலுத்தப்படுகிறது. ஆகையால் மேடான நிலங்களுக்குச் செல்வது கடினம் எனவே நிலம் நன்கு சமப்படுத்தப்படுதல் அவசியம்
அடுக்கு அலை நீர்பாய்ச்சல்
- நீரை முழுவதும் சமப்படுத்திய நிலத்தில் ஒரே நேரத்தில் விடுவதை விட குறிப்பிட்ட கால இடைவெளியில் பாய்ச்சுவது மிகுந்த பயனளிக்கும்
- மண் அரிப்பு சுழற்சி நிலப்பரப்பு பள்ளமாக இருக்கும் இடங்களில் அதிக நீர் என்று தேங்கியிருக்கும்.
- அவ்வப்போது இந்நீரை மேடான இடங்களுக்கு இறைத்து ஊற்றினால் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகும் இருக்கும். பொதுவாக வெள்ள நீர்ப்பாசன முறையில் வயல் முழுவதும் நிறையும் வரை நீர்ப்பாய்ச்சுதல் செய்வர். இவ்வாறு செய்யும்போது மண் வகையைக் கவனிக்க வேண்டும். களிமண் போன்ற மண் வகைகளில் நீர் ஊடுருவுதல் குறைவு.
- இத்தகு சூழ்நிலையில் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பகள் அதிகம்.
- அதோடு வேர்மண்டலத்தைத் தாண்டி வெகு ஆழத்தில் சென்று விட்ட நீரினால், பயிருக்குப் பலனேதும் இல்லை அடுக்கு நீர் முறையில் மண் ஈரப்பதம் அளவிடும் கருவிகள் பாசனத்திற்கு சரியான அளவீடுகளைக் கொடுக்கின்றன.
- இக்கருவிகள் நீர் குறிப்பிட்ட அளவை (மண்ணிற்கு தேவையான ஈரப்பதத்தை) அடைந்தவுடன் அதைக் குறியிட்டுக் காட்டி விடும்.
- அதற்கு மேல் பாய்ச்சும் நீர் கீழே சென்று நீருடன் கலந்து விடும். இதைப் பயன்படுத்தி சரியான அளவு நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.
சொட்டு நீர் பாசனம்
செயல்கள்
பயிர்களுக்கு நீரை அழுத்தத்துடன் வலைப்பின்னல் குழாய் வழியாக வழங்குகின்ற முறையாகும்.
உபகரணங்கள்
- முக்கிய பகுதியில் மேல் நிலைத் தொட்டி இருக்கும்.
- முக்கிய குழாய் பகுதியில் 50 மி.மீ, 75 மி.மீ, எச். டி. பி. இ அல்லது பி.வி.சி குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- துணை குழாய் பகுதியில் 45 மி.மீ, 50 மி.மீ எச்.டி.பி.இ. குழாய்கள் பயன்படுத்தப் படுகின்றன.
- பக்கவாட்டில், 12 மி.மீ, 16 மி.மீ, எல்.எல்.டி.பி.இ பயன்படுத்தப்படுகின்றன.
- சொட்டு குழாய்கள் – 2 எல்.பி.எச், 4 எல்.பி.எச், 8 எல்.பி.எச் அழுத்தமுடைய வகைகள் மிகவும் ஏற்றது.
வடிக்கும் பகுதி
பெரிய மண் துகள்களை வடிக்க மணல் வடிப்பான் பயன்படுத்தப்படுகிறது. சல்லடை வடிப்பான் (120 மைக்ரான் அளவு) நுண்ணிய துகள்களை வடிக்க பயன்படுகிறது.
உர பகுதி
கரைத்த உரங்கள் அல்லது நீர்ம உரங்களை அளிப்பதற்கு உரத் தொட்டி பயன்படுகிறது. அழுத்தமானி 0.5 முதல் 2.5 கே.எஸ்.சி மற்றும் குழாயின் அளவைப் பொறுத்து கதவுத் தடுப்பு பயன்படுகிறது. இதனால் நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கலனிக்காகவும் முடிகிறது.
கவனிக்க வேண்டியவை
- சாதாரண முறையைக் காட்டிலும் 50-65 சதம் வரை நீர் சேமிக்கப்படுகிறது
- பயிர் எளிதில் வளர்ச்சி அடைகிறது
- அதிக உற்பத்தி மற்றும் உயர்ந்த தரம்
- நிலத்தை ஒரளவு சமப்படுத்தினாலலே போதுமானது நடை முறை நீர்ப்பாசனம் போன்று சரிசமமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை
- சாதாரண, தண்ணீரையே பயன்படுத்தலாம். நல்ல தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை