தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக கால்நடைகள், ஆடுகள், கோழிகள் மற்றும் பன்றிகள் போன்ற கால்நடைகளை பாதிக்கக்கூடிய நோய்களிலிருந்து அவற்றை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையம் (JICA) இன்று (03) 08 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளித்தது.
இந்த மருத்துத் தொகைகளில் ஏராளமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் மற்றும் வெளியேற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் உள்ளன. JICA தலைமைப் பிரதிநிதி திரு யமடா டெட்சுயா, பிரதிநிதிகள் திரு Mizuno Tsuyoshi மற்றும் சிரேஷ்ட பிரதிநிதி திரு நோகுச்சி டகுமா மற்றும் கருத் திட்ட நிபுணர் திரு பிரசாத் நிஷாங்க ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.
அனைத்து 09 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கால்நடைத் துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், அதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு மருந்து தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையினால் கால்நடை வளர்ப்புத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நீரில் மூழ்கல் காரணமாக பன்றிகள் உள்ள பல பண்ணைகள் அழிவடைந்துள்ளதாகவும், பல சிறிய கோழிப்பண்ணைகள் அழிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
மேலும், பல வர்த்தகளவிலான மரக்கறி தோட்டங்கள் அழிந்துள்ளதால் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார். மீனின் விலை அதிகரிப்பால் கோழி இறைச்சியினதும் மற்றும் முட்டையினதும் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், தற்போது கோழி இறைச்சியை அதிகரிக்க கூடாது என கோழி உற்பத்தி நிறுவனங்களினதும் மற்றும் கோழிப்பண்ணைகளினதும் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் திரு ஜனக தர்மகீர்த்தி மற்றும் அமைச்சின் ஆலோசகர் திரு கே. எச். கருணாரத்ன ஆகியோர் அடங்கலாக பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.