வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்- கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.... Read more »

சர்வதேச சந்தைகளில் இலங்கையின் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுவதாகவும், அந்த சந்தையை ஆக்கிரமிப்பதற்கு தேவையான ஆதரவை வழங்க தமது நாடு தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்

சர்வதேச சந்தையில் இலங்கையின் விவசாயப் பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுவதாகவும், அந்த சந்தைகளை ஆக்கிரமிப்பதில் இலங்கை அரசாங்கமும் வர்த்தகர்களும் ஆர்வம் காட்ட வேண்டுமென இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் திருமதி HE Bonnie Horbach தெரிவித்தார். அதற்கு தேவையான ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார். நெதர்லாந்தினதும்... Read more »

வெள்ளத்தின் காரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து அவற்றை பாதுகாக்க ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையம் 08 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை வழங்குகின்றது

தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக கால்நடைகள், ஆடுகள், கோழிகள் மற்றும் பன்றிகள் போன்ற கால்நடைகளை பாதிக்கக்கூடிய நோய்களிலிருந்து அவற்றை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையம் (JICA) இன்று (03) 08 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த... Read more »

கலாநிதி ஹேமலி கொத்தலாவலக்கு சர்வதேச பதவி

கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ஹேமலி கொத்தலாவல, விலங்குகள் சுகாதாரத்திற்கான உலக அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய பணியகத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் அண்மையில் நடைபெற்ற விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பின் வருடாந்த பொது மாநாட்டில் இவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த மாநாட்டில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர். இலங்கையில் கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியன தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேலை ஒழுங்குகள் பற்றிய ஒரு உரையையும் அமைச்சர் நிகழ்த்தினார். கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் என்பது கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள ஒரு திணைக்களமாகும். கலாநிதி ஹேமலி கொத்தலாவல பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கால்நடைகள் மருத்துவ விஞ்ஞானப் பட்டதாரி ஆவார். அதே போல் விஞ்ஞானப் பட்டப்படிப்பை இந்தியாவின் கால்நடைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திலிருந்தும் கலாநிதிப் பட்டத்தை ஜப்பானின் ஒபிஹிரோ பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுள்ளார். Read more »