விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் FAO வின் நல்ல விவசாய நடைமுறைகள் (GAP)

ஆரம்ப கட்டமாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கருவிகள் மற்றும் நவீன, காலநிலை-எதிர்ப்பு அணுகுமுறைகளை திறம்பட பின்பற்றுவதற்கு தேவையான அறிவு என்பன வழங்கப்பட்டன. GAPயை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தி, பங்கேற்பாளர்களுக்கு 0.25 ஏக்கர் நிலப்பரப்புக்கு ஏற்றவாறு வேளாண்மை கருவிகள் வழங்கப்பட்டன. திறமையான வள பயன்பாடு மற்றும் செலவு குறைப்பு ஆகியவற்றை செயற்படுத்தும் முகமாக இக்கருவிகள் சொட்டு நீர்ப்பாசன முறைகள், பிளாஸ்டிக் தழைக்கூளம், பூச்சி-தடுப்பு வலைகள் மற்றும் கல்வனைசுப்படுத்தப்பட்ட இரும்பு (GI) குழாய்கள் போன்ற அத்தியாவசிய கூறுகளை உள்ளடக்கியது,.

மேலும், GAP சான்றிதழைப் பெறுவதற்குத் தேவையான நிபுணத்துவத்தை பெறுவதற்காக FAO ஆனது விவசாயிகள் களப் பாடசாலைகள் (Farmer Field Schools – FFS) மூலம் விவசாயிகளின் திறனை வளர்த்து விவசாயிகளை மேம்படுத்துகிறது. வெற்றிகரமான GAP விவசாயத்திற்கு விரிவாக்கல் அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் களப் பயணங்களை ஒழுங்கமைப்பதன் மூலமும், பங்கேற்பாளர்கள் நவீன விவசாய முறைகள் பற்றிய விரிவான புரிதலைப் பெற்றனர். மேலும், சிறு தோட்ட விவசாயிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் (WFP) மூலம், அவர்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய இக்கட்டத்தில் பண உதவியும் கிடைத்தது.

இம் முயற்சியின் உறுதியான முடிவுகள் அதன் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பங்கேற்பாளர்களில் 71% க்கும் அதிகமான விவசாயிகள் பயிரின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயனங்களின் பயன்பாடு என்பன குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பூச்சி-தடுப்பு வலைகளை பயன்படுத்துவதன் மூலம் பூச்சித் தாக்கங்கள் மற்றும் நோய்கள் குறைவதோடு, குரங்குகள், மயில்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்ற வன விலங்குகளால் ஏற்படும் சேதத்தை குறைத்து, அதன் மூலம் பயிரின் தாங்கும் தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது.

72% விவசாயிகளின் மொத்த வருமானம் அதிகரித்துள்ளதோடு 24 விவசாயிகளுக்கு ஒரு பருவ பயிர்ச்செய்கையில் ரூ. 1,000,000/- மேல் இலாபம் கிடைத்துள்ளதோடு மேலும் 150க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 500,000/- மேல் இலாபம் கிடைத்துள்ளது. இத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தை இப்புள்ளிவிபரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இம் முயற்சியானது 0.25 ஏக்கர் நிலத்திற்கு 48%  இரசாயன உரங்களின் குறைப்புடன் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நன்மைகளையும் அளித்துள்ளது.

இம் முயற்சியானது ஐக்கிய நாடுகளின் இலங்கை SDG நிதியத்தால் நிதியளிக்கப்பட்ட கூட்டு உணவு பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்நிதியானது புதுமையான, வினையூக்க மற்றும் மாறக்கூடிய முயற்சிகளை தேசிய முன்னுரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி ஒத்துழைப்புக் கட்டமைப்புடன் (2023-2027)  ஊக்குவிக்கிறது. இது அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, அமைதிக்கான நிதி மற்றும் கூட்டு SDG நிதியத்தால் ஆதரிக்கப்படுகிறது.

மூன்று மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகளின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், அவுஸ்திரேலிய துணைத் தலைவர் திருமதி லலிதா கபூர், மாகாண விவசாயச் செயலாளர் திரு உபாலி ஜயசேகர மற்றும் FAO உதவிப் பிரதிநிதி (செயற்திட்டம்) திரு நளின் முனசிங்க ஆகியோரின் அனுசரணையில் விருது வழங்கும் விழா தனமல்விலவில் நடைபெற்றது. இந்நிகழ்வு முன்மாதிரியான சாதனைகளை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், சந்தை தேவையை மேம்படுத்துவதிலும், நிலையான விவசாய நடைமுறைகளை வளர்ப்பதிலும் GAP சான்றிதழின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியது.

முன்னோக்கிப் பார்க்கையில், FAO Sri Lanka விவசாய நவீனமயமாக்கலை ஊட்டுவதற்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

Source: https://www.fao.org/srilanka/news/detail-events/en/c/1697364

Recommended For You

About the Author: Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *