கிராமியச் சமூகங்களின் வருமான பல்வகைப்படுத்தல் நோக்கில் செயல்படுத்தப்படும் முக்கிய அரசாங்க மற்றும் பாரிய வெளிநாட்டு நிதியுதவிக் கருத்திட்டங்களை மீளாய்வு செய்வதன் மூலம், இலங்கையில் நிலையான வகையில் வருமானப் பல்வகைப்படுத்தல் முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை விருப்பங்களைப் பின்வரும் கொள்கைச் சுருக்கம் வழங்குகிறது.
பரிந்துரைகள்
- நிலையான வருமான பல்வகைப்படுத்தல் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தும் போது, ஆரம்ப திட்டமிடல் நிலைகளினதும் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிலைகளினதும் போது வருமான பல்வகைப்படுத்தல் திட்டம் முக்கியமான சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக் காரணிகளை எவ்வாறு அடையும் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
- பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது “முக்கிய நிர்ணயம் செய்பவை” என அடையாளம் காணப்பட்ட காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன், அவை நிலையான கருத்திட்ட அமுலாக்கத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தெளிவுபடுத்தப்படவும் வேண்டும். உதாரணம்: ஆய்வின் முடிவுகளின்படி, ஒப்பீட்டளவில் இளம் வயதினரை விட வயதான குடித்தனத் தலைவர்களிடையே, வருமானத்தைப் பன்முகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இது வயதானவர்களின் அறிவையும் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்களின் அனுபவத்தையும் மற்றும் இடர் எடுக்கும் திறனையும் குறிக்கிறது என்பதுடன், இது இளம் வயதினரைக் காட்டிலும் அவர்களின் வருமானத்தைப் பன்முகப்படுத்த அதிகளவில் இணக்கமுறுவதையும் செய்கிறது.
கருத்திட்ட வடிவமைப்பு, செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிலைகள் ஆகியவற்றின் போது, வரவிருக்கும் விரிநிலை மற்றும் நுண் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என்பது பற்றிய ஒரு தெளிவான திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதுடன், பல்வேறு சமாளிப்பு அல்லது பல்வகைப்படுத்தல் வழிமுறைகளைப் பயன்படுத்தி நெருக்கடி சூழ்நிலையின் போது சூழ்நிலையை எதிர்கொள்ளவும், செழித்து வளரவும் பயனாளிகளுக்கு சரியான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறாக கருத்திட்டமானது நிலையான நித்திய ஆதரவு இல்லாமல் செயல்படும்.
ஈடுபட்டுள்ளதுடன், 19 சதவீதம் மற்றும் 10 சதவீதம் ஆகியவை முறையே மரக்கறிகள் மற்றும் தானியங்கள் ஆகிய செய்கையில் ஈடுபட்டுள்ளன. பல்லாண்டுப் பயிர்களைப் பயிரிடும் குடித்தனங்களில் பெரும்பான்மையானவை தோட்டப் பயிர்களை (தேயிலை, இறப்பர், தென்னை) பயிரிடுவதுடன், அதைத் தொடர்ந்து சிறு ஏற்றுமதிப் பயிர்கள் (கோப்பி, மிளகு, வெற்றிலை போன்றவை) பயிரிடுகின்றன.
இலங்கையில் வருமான பல்வகைப்படுத்தலின் காரணிகளை நிர்ணயித்தல்
இந்தப் பகுப்பாய்வு 20,157 குடும்பங்களை உள்ளடக்கிய 2013 HIES நுண் தரவு தொகுப்பையும், 19,772 குடும்பங்களை உள்ளடக்கிய 2019 HIES தொகுப்பையும் உள்ளடக்குவதுடன், பல்லுறுப்பி ஏற்பாட்டியல் பின்னடைவு மாதிரியைப் பயன்படுத்தி வருமானப் பன்முகத்தன்மையை நிர்ணயிக்கும் காரணிகள் மதிப்பிடப்பட்டன.
குடித்தனத் தலைவரின் வயது, அவரது கல்வி நிலை, குடித்தனத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 15 வயதுக்கு மேற்பட்ட குடித்தனத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாள்பட்ட நோயினால் அல்லது அங்கவீனத்தினால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, மாவட்டம், குடித்தனத் தலைவரின் பால்நிலை, கடன்பட்டநிலை மற்றும் விவசாய நிலங்களின் உரிமை மற்றும் கால்நடைகளின் உரிமை ஆகியவை முக்கிய தீர்மானிக்கும் காரணிகளாகும்.
இலங்கையில் முன்னைய வருமான பல்வகைப்படுத்தல் முன்னெடுப்புகளின் மீளாய்வு
இந்தக் கருத்திட்டங்களுடன் தொடர்புடைய முக்கிய பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்காக 2006 முதல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்து முக்கிய வருமான பல்வகைப்படுத்தல் முன்னெடுப்புக்களை ஆய்வு மதிப்பாய்வு செய்தது.
பலங்கள்
தேசிய மற்றும் பிராந்திய மட்டத்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட கருத்திட்டக் கட்டமைப்பைக் கொண்டிருத்தல், பெருமளவிலான குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குதல் மற்றும் நாடளாவிய வலையமைப்பின் இருப்பு ஆகியவை முக்கிய பலங்களாக அடையாளம் காணப்பட்டன. மேலதிகமாக, அதிகரித்த பெண்கள் பங்கேற்பு, சனசமூக அதிகாரமளிப்பு மற்றும் சர்வதேச தரத்தைக் கடைபிடிப்பதற்கான அரசாங்க அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சிகள் ஆகியவை ஏனைய முக்கிய பலங்களாகும்.
பலவீனங்கள்
எனினும், இழப்பு வெளிப்படைத்தன்மை, ஊழல், தலைமைத்துவத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தலைமைப் பண்புகளில் கவனம் செலுத்தாமல் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள வெளிப்புற தாக்கங்கள், பயனாளிகளின் உண்மையான தேவைகளை மோசமாக நிவர்த்தி செய்தல், தலைமைத்துவத்திற்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் மற்றும் பயனாளிகளுக்கும் இடையே நேர்மையின்மை மற்றும் மோசமான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை இலக்குபடுத்துவதற்கான பலவீனங்கள் இந்த முன்னெடுப்புக்களின் நோக்கங்களை சாதிப்பதற்குத் தடையாக உள்ள காரணிகளாகக் கண்டறியப்பட்டன.
வாய்ப்புக்கள்
வருமானம் ஈட்டுவதற்கான பல திறன்களைப் பயன்படுத்துதல், சொந்த வளங்களைப் பயன்படுத்தும் காரணத்தால் குறைந்த உற்பத்தி ஆகுசெலவு மற்றும் வறுமை ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பொதுக் கொள்கை ஆகியவை இந்த முயற்சிகளை மேலும் வெற்றியடையச் செய்வதற்கான சாத்தியமான வாய்ப்புகளாக இருப்பதை ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
அச்சுறுத்தல்கள்
எனினும், தயாரிப்புகளுக்கான சரியான மற்றும் நிலையான சந்தை இல்லாமை, காலநிலை மாற்றத்தின் விளைவுகள், இயற்கை வளங்களின் சீரழிவு மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை இந்த முன்னெடுப்புகளின் வெற்றிக்கான முக்கிய அச்சுறுத்தல்களாக அடையாளம் காணப்பட்டன.
ஒரு கொடுக்கப்பட்ட சூழலில் வருமான பல்வகைப்படுத்தல் முன்னெடுப்புகளின் நிலைத்தன்மையை பாதிக்கும் முக்கிய காரணிகள்
வருமான பல்வகைப்படுத்தல் முன்னெடுப்புகளின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் முக்கிய காரணிகளை அடையாளம் காண, உலக வங்கி நிதியங்கள், ஐரோப்பிய ஒன்றிய நிதியங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்ட (UNDP) நிதியங்கள் ஆகியவை மூலம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட வருமான பல்வகைப்படுத்தல் முன்னெடுப்புகளின் நான்கு நிகழ்வுகள் விரிவாக பகுப்பாயப்பட்டன. நிலைத்தன்மையைப் பாதிக்கும் முக்கிய காரணி, கொள்கைக் கூறு பகுப்பாய்வு மூலம் அடையாளம் காணப்பட்டதுடன், கூட்டு குறியீட்டு அணுகுமுறையைப் பயன்படுத்தி நிலைத்தன்மையின் மட்டம் அளவிடப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கருத்திட்டத்தின் நிலைத்தன்மையின் மட்டத்தை அட்டவணை 1 காட்டுகிறது.
அட்டவணை1 – நிலைத்தன்மையின்மட்டம்
* 5 சதவீதத்தில் குறிப்பிடத்தக்கது என குறிக்கின்றது
நிலைத்தன்மையின் பல்வேறு வகைகளை பாதிக்கும் காரணிகள்
சமூக நிலைத்தன்மை
அடிப்படைத் தேவைகளுக்கான போதுமானதும் மற்றும் சமமானதுமான அணுகல், சமூக உள்கட்டமைப்பிற்கான போதுமானதும் மற்றும் சமமானதுமான அணுகல், மற்றவர்களின் வாழ்வாதார வாய்ப்புகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், சமூக மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும், மூழ்கும் சிக்கல்களைத் தீர்க்கும் உள்ளார்ந்த திறனை மேம்படுத்துவதற்கும், வருமானம் ஈட்டும் செயல்பாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவுதல், கற்றல் மற்றும் சுய வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல், சமூக ஒருங்கிணைப்பினை ஊக்குவித்தல், சமூக ஒட்டுந்தன்மையையும், உள்ளடக்கத்தையும் மற்றும் ஊடாடத்தையும் ஊக்குவித்தல், தனிப்பட்ட குறைபாடுகள் காரணமாக ஏற்படும் தீமைகளைப் போக்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் உணர்வை அதிகரித்தல், சமூக அங்கீகாரத்தின் அளவை அதிகரித்தல் ஆகியன சமூக நிலைத்தன்மையை பாதிக்கும் முக்கிய காரணிகள் எனக் கண்டறியப்பட்டன.
பொருளாதார நிலைத்தன்மை
வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுதல், பிற தொடர்பு நிறுவனங்களுக்கு நன்மைகளை வழங்குதல், முழு சனசமூகத்திற்கும் நன்மைகளை உருவாக்க உதவுதல் மற்றும் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்த
உதவுவதல் ஆகியன பொருளாதார நிலைத்தன்மையைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாக் கண்டறியப்பட்டன.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
இயற்கை வளங்களைப் பராமரிப்பதற்ம், மேம்படுத்துவதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் சாதகமாகவிருத்தல், சமூகத்தின் சூழலியல் விழிப்புணர்வை அதிகரித்தல், இயற்கை வள ஆதாரத்தைப் பாதுகாக்க உதவுதல் மற்றும் மண் அரிப்பையும், நீர் மட்டம் குறைவடைவதையும், மண்ணின் உவர்தன்மையையும் குறைப்பதற்கு காரணியாகவிருத்தல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதிக்கும் முக்கிய காரணிகள் உள்ளடக்கின.
வருமான பல்வகைப்படுத்தல் முயற்சிகளின் நிலைத்தன்மையின் மட்டத்தைப் பாதிக்கும் காரணிகள்
மேலே கலந்துரையாடப்பட்ட நிலைத்தன்மை காரணிகளைப் பாதிக்கும் பாரிய வெளிப்புற சுற்றுச்சூழல் காரணிகளை அட்டவணை 2 காட்டுகின்ற அதேவேளை, கருத்திட்டத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் முக்கிய உள்ளகச் சுற்றுச்சூழல் காரணிகளை அட்டவணை 3 காட்டுகிறது.
அட்டவணை: வெளிப்புற சுற்றுச்சூழல் காரணிகள் | |
தொழில்நுட்பக் காரணிகள் | உள்ளீட்டுச் சிக்கல்கள் |
பொருளாதாரக் காரணிகள் | குறைந்துள்ள கேள்வி |
விலைச் சிக்கல்கள் | |
மின் தோற்றுவித்தல் சிக்கல்கள் | |
எரிபொருள் சிக்கல் | |
விவசாய இரசாயன சிக்கல் | |
மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் | |
உயர் உற்பத்தி ஆகுசெலவு | |
நிதிய ஒதுக்கீடுகளுடன் சிக்கல்கள் | |
குறைந்துள்ள உற்பத்தித்திறன் | |
வணிகச் சரிவை விரிநிலை-பொருளாதாரத் தாக்கங்கள் பூர்த்தி செய்கின்றன | |
அரசியல் மற்றும் சட்ட காரணிகள் | மூலப்பொருட்களை பிரித்தெடுப்பதில் சட்டச் சிக்கல்கள் |
உலகளாவிய காரணிகள் | வணிகச் சரிவை விரிநிலை-பொருளாதாரத் தாக்கங்கள் பூர்த்தி செய்கின்றன |
சுற்றுச்சூழல் காரணிகள் | வன விலங்குகள் மற்றும் பூச்சிகளால் பயிர் சேதம் |
இயற்கை ஆபத்துகள் |
அட்டவணை 3: உள்ளக சுற்றுச்சூழல் காரணிகள் | |
மனித வளங்கள் | பயனாளிகளிடையே பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை |
பெறுமதி முறைமை | பண்ணைச் செயல்பாடுகள் பற்றிய புரிதல் கடினமாக உள்ளது |
நிதிநிலை மற்றும் சந்தை வளங்கள் | மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் |
நிதிய ஒதுக்கீடுகளுடன் சிக்கல்கள் | |
திட்டங்கள் மற்றும் கொள்கைகள் | நிறுவனம்சார் சிக்கல்கள் |
மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் | |
கருத்திட்டப் பலன்கள் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை | |
தரச் சிக்கல்கள் | |
கருத்திட்ட திட்டமிடலிலும் மற்றும் செயல்படுத்துவதிலும் சிக்கல்கள் |
வருமான பல்வகைப்படுத்தல் முன்னெடுப்பொன்று செயல்படுத்தப்பட்டவுடன், வருமான பல்வகைப்படுத்தல் முன்னெடுப்பின் நிலைத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விரிநிலை மற்றும் நுண் சுற்றுச்சூழல் காரணிகள் உள்ளன என்று ஆய்வு முடிவுகள் விளக்குகின்றன. விரிநிலை சுற்றுச்சூழல் காரணிகளுடன் ஒப்பிடும்போது, உள்ளக சுற்றுச்சூழல் காரணிகளின் மீது கருத்திட்டத்தை செயல்படுத்துபவர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டின் மட்டங்கள் உயர்வானவையாகும்.
முக்கிய பரிந்துரைகள்
- நிலையான வருமான பல்வகைப்படுத்தல் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தும் போது, ஆரம்ப திட்டமிடல் நிலைகளினதும் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிலைகளினதும் போது வருமான பல்வகைப்படுத்தல் திட்டம் முக்கியமான சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக் காரணிகளை எவ்வாறு அடையும் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
- பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது “முக்கிய நிர்ணயம் செய்பவை” என அடையாளம் காணப்பட்ட காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன், அவை நிலையான கருத்திட்ட அமுலாக்கத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தெளிவுபடுத்தப்படவும் வேண்டும். உதாரணம்: ஆய்வின் முடிவுகளின்படி, ஒப்பீட்டளவில் இளம் வயதினரை விட வயதான குடித்தனத் தலைவர்களிடையே, வருமானத்தைப் பன்முகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இது வயதானவர்களின் அறிவையும் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்களின் அனுபவத்தையும் மற்றும் இடர் எடுக்கும் திறனையும் குறிக்கிறது என்பதுடன், இது இளம் வயதினரைக் காட்டிலும் அவர்களின் வருமானத்தைப் பன்முகப்படுத்த அதிகளவில் இணக்கமுறுவதையும் செய்கிறது.
- கருத்திட்ட வடிவமைப்பு, செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிலைகள் ஆகியவற்றின் போது, வரவிருக்கும் விரிநிலை மற்றும் நுண் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என்பது பற்றிய ஒரு தெளிவான திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதுடன், பல்வேறு சமாளிப்பு அல்லது பல்வகைப்படுத்தல் வழிமுறைகளைப் பயன்படுத்தி நெருக்கடி சூழ்நிலையின் போது சூழ்நிலையை எதிர்கொள்ளவும், செழித்து வளரவும் பயனாளிகளுக்கு சரியான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறாக கருத்திட்டமானது நிலையான நித்திய ஆதரவு இல்லாமல் செயல்படும்.