விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ திரு.மகிந்த அமரவீர அவர்கள் Govimina.com இணையத்தளத்தை திறந்து வைக்கும் போது. விவசாய இராஜாங்க அமைச்சர் திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (வலது) ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜி.ஜி. பந்துல மற்றும் DevPro Gurentee Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், திரு. திலக் கருணாரத்ன (இடது) ஆகியோரும் இங்கு உள்ளனர்.
விவசாயம் மற்றும் கிராமிய அறிவு தொடர்பான வினைத்திறனான தகவல்தொடர்பு செயல்முறையை நிறுவுவதன் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாயப் பயிற்சியாளர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொடர்பாளர்கள் மற்றும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் பிற பங்குதாரர்கள் உள்ளிட்ட விவசாய தொழில்முயற்சியாண்மையோருக்கு ஒரு விரிவான தகவல் தொடர்பாடல் தளத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக gowimina.com மற்றும் kamanalam.com ஆகிய இணையத்தளங்களின் வெளியீட்டுவிழாவானது 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் திகதி ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் நாராயணசாமி மாநாட்டு மண்டபத்தில், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ திரு.மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
Kamanalam.com இணையத்தளம் விவசாய இராஜாங்க அமைச்சர் திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ திரு. மஹிந்த அமரவீர உரையாற்றியபோது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜி.ஜி பந்துல உரையாற்றியபோது.
DevPro Guarantee Limited நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. திலக் கருணாரத்ன உரையாற்றியபோது.
DevPro Guarantee Limited இன் நிரல் முகாமையாளர் திரு. சபீர் அஹமட் (இடது), அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. திலக் கருணாரத்ன (மத்தி) மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி. என்.பி.ஜி. சமந்த (வலது).
இவ் இணையதளங்களை உருவாக்குவதற்கான அனுசரணைDevPro Guarantee Limited நிறுவனத்தினால் வழங்கப்பட்டதோடு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள gowimina.com மற்றும் kamanalam.com இணையத்தளங்கள் மூலம் விவசாயத் தகவல்களை அணுக முடியும்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ திரு.மஹிந்த அமரவீர அவர்கள், விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தகவல்களை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தளத்தில் வெளியிடப்பட வேண்டிய தேவையுள்ளது என இந்நிகழ்வின் போது குறிப்பிட்டார். மேலும் விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் DevPro Gurentee Limited ஆகியவற்றின் சேவையையும் அவர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் செய்தி மற்றும் வெளியீட்டு அதிகாரி Mrs. வசந்தி ராஜபக்ஷ மற்றும் Ms. தர்சிகா விஜயகுமார் ஆகியோர் கூட்டத்தை நடாத்தியபோது.
மேலும் இந் நிகழ்விற்கு, விவசாய இராஜாங்க அமைச்சர் Mr. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, ஜனாதிபதி செயலகத்தின் உணவு மற்றும் உட்கட்டமைப்பு பிரிவின் பணிப்பாளர் Mr.P.M.S. ஜெயதிலக, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் Mr. ஜனக தர்மகீர்த்தி, அவுஸ்திரேலிய உயர் காரியாலய, அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான முதலாவது செயலாளர் Ms.எரிகா சீமூர், DevPro Gurentee Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், Mr.திலக் கருணாரத்ன மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் பணிப்பாளர் Dr.G.G.பந்துல ஆகியோரும் பங்கேற்றனர்.
புகைப்படங்கள் – Pubudu Niroshana