பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் சீற்றத்திலிருந்து இலங்கை மீனவர்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, படகு ஒன்றை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மீனவர்கள் கடல் சீற்றங்களில் இருந்து தங்களது பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட படகுகளை எதிர்காலத்தில்... Read more »
உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி “உறுமய” திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்றும்... Read more »
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.... Read more »
சர்வதேச சந்தையில் இலங்கையின் விவசாயப் பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுவதாகவும், அந்த சந்தைகளை ஆக்கிரமிப்பதில் இலங்கை அரசாங்கமும் வர்த்தகர்களும் ஆர்வம் காட்ட வேண்டுமென இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் திருமதி HE Bonnie Horbach தெரிவித்தார். அதற்கு தேவையான ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார். நெதர்லாந்தினதும்... Read more »
கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ஹேமலி கொத்தலாவல, விலங்குகள் சுகாதாரத்திற்கான உலக அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய பணியகத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் அண்மையில் நடைபெற்ற விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பின் வருடாந்த பொது மாநாட்டில் இவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த மாநாட்டில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர். இலங்கையில் கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியன தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேலை ஒழுங்குகள் பற்றிய ஒரு உரையையும் அமைச்சர் நிகழ்த்தினார். கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் என்பது கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள ஒரு திணைக்களமாகும். கலாநிதி ஹேமலி கொத்தலாவல பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கால்நடைகள் மருத்துவ விஞ்ஞானப் பட்டதாரி ஆவார். அதே போல் விஞ்ஞானப் பட்டப்படிப்பை இந்தியாவின் கால்நடைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திலிருந்தும் கலாநிதிப் பட்டத்தை ஜப்பானின் ஒபிஹிரோ பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுள்ளார். Read more »